என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Thursday, 23 February 2012

என் பயணத்தின் எந்த சாலையிலும்...

என் பயணத்தின் எந்த சாலையிலும் 
எதிர்படகூடும் அவள்  
விழிகளுக்குப்பின் ஒரு கனத்த 
காதலை மறைத்த  தழும்புடனும்,
இதழில் போலிப்புன்னகையை 
ஏந்தியபடியும்,
பெருத்த  மௌனத்தை
மனதில்  சுமந்தபடியும்,
கையில் குழந்தையுடனும்,
அவள் கணவனை பின்தொடர்ந்தபடியும்,
என் பயணத்தின் எந்த சாலையிலும் 
எதிர்படகூடும் அவள்...