என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Wednesday, 13 February 2013

தேவதைதான் அவள்

மார்கழியின் ஒரு மாலைப்பொழுதில்
சுடாத சூரிய நிழலில்
என் விழித்திரையில் விபத்துக்குள்ளானது
எதிர்ப்பட்ட அவள்  பிம்பம்
மையிடாத  கருவிழியோடு
மைவண்ண சேலை காற்றை தழுவ
கடந்து போனாள் என்னை
தேவதைதான் அவள்......